December 24, 2016

இணையவழி வர்த்தக நிறுவனங்கள், தங்களது இணைய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வலுப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இணையவழி வர்த்தக நிறுவனங்கள், தங்களது இணைய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வலுப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

📝இது தொடர்பாக உள்துறை வட்டாரங்கள் கூறியதாவது:


💳 உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர், பொதுமக்கள் மத்தியில் மின்னணு பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

💳 இதையடுத்து, இணையவழி பண மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

💳 பல்வேறு இணையவழி வர்த்தக நிறுவனங்களின் இணையதளங்கள் விஷமிகளால் எளிதில் ஊடுருவும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

💳 எனவே, தங்களது இணைய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வலுப்படுத்தும்படி அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

💳 இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

💳 வங்கிகளும் தங்களது இணையவழி பரிவர்த்தனைக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்