December 28, 2016

ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் இன்று முதல் 301 இடங்களில் 2 மாதங்களுக்கு செயல்படும்.

🔶 தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கு பதிவுசெய்துவிட்டு ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் போன்றவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன.



🔷 இன்று (28.12.2016)  முதல் 301 இடங்களில் 2 மாதங்களுக்கு இந்த முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔶 இந்த சேவையைப் பெற ஏதுவாக, ஆதார் உதவி மையங்களை தமிழகத்தின் அனைத்து 285 வட்டாட்சியர் அலுவலகங்கள் , சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்  மற்றும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

🔷 ஆதார் எண், ஆதார் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது விவரங்களை தெரிவித்து, ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

🔶 அரசு இ-சேவை மையங்களில் ரூ.30 செலுத்தி விரல் ரேகை மற்றும் கருவிழியினை பதிவுசெய்து பிளாஸ்ட்டிக் அட்டை அல்லது ரூ.10 செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெறலாம்.

🔷 ஆதார் எண்ணிற்கு ஒருமுறை பதிவு செய்தவர்கள், நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல தேவையில்லை, உதவி மையங்களையே அணுகலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்