December 24, 2016

10ம் வகுப்பு பொதுத் தேர்‌வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜன. 4 கடைசி நாள்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்‌வெழுதும் தனித்தேர்வர்கள் வரும் 26ஆம் தேதி‌ முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இ‌யக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள் அந்தந்த‌ ‌கல்வி
மாவட்டங்களில் அமைக்கப்‌பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுக் கட்டணமான 175 ரூபாயை ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

வரும் 26ஆம் தேதியிலிருந்து ஜனவரி 3ஆம் தேதிக்குள்‌ அந்தந்த மாவட்ட‌‌ கல்வி அலு‌வலர் அலுவலகங்களில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி மையங்களில் சேர பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பயிற்சி வகுப்பில் சேர்ந்த சீட்டையும் இணைக்க வேண்டும். மேலும் இதர விவரங்களை www.dge.tn.gov.in என்ற‌ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்