December 24, 2016

ஜனவரி 1 - 2017 முதல் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான நிபந்தனைகளை தளர்த்த வாய்ப்பு..?

💎 பொருளாதார விவகாரங்கள் குறித்து உயர்நிலைக் குழுவுடன் வரும் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.



💎 இதுகுறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

💎 டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

💎 இதில், நிதி ஆயோக் உறுப்பினர்கள், மத்திய நிதி, வர்த்தக, தொழில் துறை அமைச்சகங்களின் உயரதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்கிறார்கள்.

💎 இதில், ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு நிலவரம், பணத் தட்டுப்பாடுகள் குறித்தும், பொருளாதார விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

💎 மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

💎 மேலும், வரும் டிசம்பர் 30ம் தேதியுடன் பழைய கரன்சிகளை திரும்ப பெறும் அவகாசம் முடிவடைவதாலும், ரிசர்வ் வங்கியில் போதிய அளவுக்கு புதிய கரன்சிகள் உள்ளதாலும், ஜனவரி 1 முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான நிபந்தனைகளை ரத்து செய்வது பற்றியும் பரிசிலீக்கப்படும்.

💎 நிபந்தனைகள் முழுவதும் ரத்து ஆகா விட்டாலும் பெரும்பாலும் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்