December 09, 2016

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான இன்றைய (09.12.2016) வழக்கு விசாரணையின் நிலை.

High School HM Promotion Today Case (09.12.2016) Details.

🔶 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான இன்றைய வழக்கு (09.12.2016) விசாரணையின் நிலை:

🔷 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று (09.12.2016) சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

🔶 இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
 
🔷 ஆனால் இன்று (09.12.2016) நடந்த விவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும்.

🔶 இறுதி விசாரணை வரை தற்போதுள்ள தடையாணை உள்ளபடியே தொடரும்.

🔷 இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும்.

🔶 இதன் மூலம், புதிதாக தடையாணை ஏதும் இவ்வழக்கில் பெற இயலாது.

🔷 அதே சமயம், இருக்கின்ற தடையாணையை யாராலும் நீக்க முடியாது.

🔶 இனி ஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே.

🔷 ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம் லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்கு வர சில மாதங்கள் ஆகும்.

🔶 இன்னும் சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல் கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை.


📝 தகவல்கள்:
                      திரு. ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர்,
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் ,
தருமபுரி மாவட்டம்.


              🙏Thanks to Mr. ப. நடராசன்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்