November 30, 2016

ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் - RBI அறிவிப்பு. 

ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் - RBI அறிவிப்பு.


💶 ₹500, ₹1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கடந்த 8–ந் தேதி அறிவிக்கப்பட்டது.

💴 இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கி ATM களில் ஒரு நாளைக்கு ₹2,500 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது.

💵 இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் தோறும் பணம் எடுக்க மக்கள் அதிகமாக வருகை புரிந்தனர்.

💳 ATM களில் நிரப்பப்படும் பணமும், பணம் நிரப்பிய சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடும் நிலைமையே காணப்படுகிறது.

💷 இதற்கிடையே, கருப்பு பணம் வைத்திருப்போர் அதை வெள்ளையாக்க பல வழிகளில் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

💶 அந்த வகையில், பிரதமரின் ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு மூலமாகவும் இத்தகைய முயற்சி நடைபெறுவதாக புகார் வெளியான நிலையில், ஜன் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

💴 அதன்படி, ஜன் தன் வங்கி கணக்கில்  இருந்து மாதம் ₹10 ஆயிரம் மட்டுமே இனி எடுக்க முடியும்.

💷 ₹10 ஆயிரத்திற்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் வங்கி மேலாளரின் அனுமதி பெற்றுதான் எடுக்க வேண்டும்.

💶 KYC ( உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தராதவர்கள் மாதம் ₹ 5 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்