November 22, 2016

ஜூலை மாத NET தேர்வு முடிவுகள் வெளியீடு.


📝 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (NET) முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.


📝 நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் இந்தத் தேர்வு CBSE சார்பில் நடத்தப்படுகிறது.

💎 2016 டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பை CBSE அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், ஜூலை மாதத் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால், ஜனவரி மாதத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

💎 இதையடுத்து ஜனவரி மாத NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 23-ஆக நீட்டித்தது.

💎 ஜூலை மாத NET தேர்வு முடிவை திங்கள்கிழமை (21.11.2016) CBSE வெளியிட்டது.

💻  www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்