November 22, 2016

திருமண செலவிற்காக வங்கியில் இருந்து ₹.2,50,000 வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது.

₹💵 திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ₹2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


🔷 ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

🔶 இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும் ₹ 2.5 லட்சம் வரை ஒரே தடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.

📝 இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

🔷 8 நவம்பர் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

🔶 30 டிசம்பருக்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ₹ 2.5 லட்சம் வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.

🔷 பெற்றோர் அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ₹ 2.5 லட்சம் வழங்கப்படும்.

🔶 ₹ 2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

🔷 திருமண அழைப்பிதழ், முன்பண செலவு ரசீது விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

🔶 வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

🔷 வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள் கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்