November 27, 2016

டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு,
இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்