November 04, 2016

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


           தென்மேற்கு பருவமழையானது விடைபெற்ற நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு
இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.


வியாழக்கிழமை காலை நிலவரப்படி, தமிழகம், புதுவையின் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 140 மி.மீ, காரைக்காலில் 110 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 60 மி.மீ. மழை பதிவானது.

மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கொடவாசல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 50 மி.மீ. மழையும் பதிவானது.

இதுதவிர ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், அரியலூர், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழையையும் எதிர்பார்க்கலாம்.
வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அதிகாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்