November 25, 2016

2019க்குள் பள்ளிகளில் கழிவறை: கலெக்டர்களுக்கு எச்சரிக்கை


"2019-ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை முழுமையாக செய்து தர உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, தவறும் பட்சத்தில் ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை அமைக்க உத்தரவிடக்கோரி ஆனந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை முழுமையாக செய்து தர வேண்டும். பள்ளிகளில் சுகாதாரம், கழிப்பறை பராமரிப்பு பற்றி அரசு ஆணை முறையாக பின்பற்றப்பட வேண்டும். பள்ளிகளில் போதிய காவலர்களை அடுத்த கல்வி ஆண்டுக்குள் நியமிக்க வேண்டும். 2019க்குள் அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆட்சியர்கள், கல்வி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது." - 2019க்குள் பள்ளிகளில் கழிவறை: கலெக்டர்களுக்கு எச்சரிக்கை 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்