November 26, 2016

டிசம்பர் 15ம் தேதி வரை பழைய ₹500 நோட்டுகள் செல்லுபடியாகும் 21 இடங்கள்.

டிசம்பர் 15ம் தேதி வரை பழைய ₹500 நோட்டுகள் செல்லுபடியாகும் 21 இடங்கள்.

ஆயிரம் ரூபாய் நோட்டு இனி எந்தவொரு பரிவர்த்தனைக்கும் செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது அதேசமயம் 21 இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் விவரம் :

1.அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் டாக்டர் சீட்டு இருந்தால் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2.டாக்டர் சீட்டு, மற்றும் அடையாள சீட்டு இருந்தால் அனைத்து மருந்தகங்களிலும் பணம் செலுத்தலாம்.

3.அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம்.

4.ரயில்வே டிக்கெட் கவுன்டர்கள், மத்திய, மாநில அரசுகளின் பஸ் கவுன்டர்கள், விமான நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பயன்படுத்தலாம்.

5.மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகள்.

6.உடல் தகனம், அடக்கம் செய்யும் இடம்.

7.சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் வருகை, செல்லும் பகுதிகளில் கொடுக்கலாம்.

8.வெளிநாட்டு பயணிகள் பணத்தை மாற்றி கொள்ளலாம்.

9.நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் பொருட்களை வாங்கலாம்.

10.கூட்டுறவு கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரு நேரத்தில் ₹5,000 வரை மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.

11.சமையல் காஸ் சிலிண்டர் பெறலாம்.

12.ரயில் பயணத்தின் போது கேட்டரிங் சேவைக்கு பணம் அளிக்கலாம்.

13.புறநகர், மெட்ரோ ரயில்களில் பயணச்சீட்டு எடுக்கலாம்.

14.இந்திய தொல்லியல் ஆய்வு துறை பராமரிக்கும் எந்தவொரு நினைவுச்சின்ன இடங்களிலும் நுழைவு சீட்டு வாங்கலாம்.

15.மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கட்டணம், வரி அல்லது அபராதம் செலுத்த பயன்படுத்தலாம்.

16.நீர், மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தலாம். அதே சமயம், பழைய பாக்கி அல்லது நடப்பு கட்டணங்களை மட்டுமே தனிநபர் அல்லது குடும்பங்கள் செலுத்த முடியும். முன்கூட்டிய கட்டணங்கள் செலுத்த அனுமதி கிடையாது.

17.நீதிமன்ற கட்டணங்கள் செலுத்தலாம்.

18.அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் விதைகள் பெற கொடுக்கலாம்.

19.மத்திய, மாநில, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் கட்டணமாக ₹2,000 வரை கட்டலாம்.

20.மத்திய, மாநில அரசுகளின் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம்.

21.ப்ரீ-பெய்டு மொபைல் சிம்களுக்கு ₹500 வரை ரீசார்ஜ் செய்யலாம்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்