November 27, 2016

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 11 விஷயங்கள் ...?

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 11 விஷயங்கள் ...?

💶₹ 25.11.2016 முதல் வங்கிகளில் ₹500 ரூபாய் ₹1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.

💷₹ அடுத்த மாதம்  டிசம்பர் 30-ம் தேதி வரை தங்களுடைய வங்கி கணக்குகளில் தங்களிடம் உள்ள ₹500 ரூபாய் மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்.

💵₹ ஒரு வாரத்துக்கு ₹24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.

💴₹  ஒரு முறைக்கு 24,000 ரூபாய் எடுத்தால் அதற்கு அடுத்த வாரம் தான் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்.

💶₹ ATM களில் ₹2,000 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடியும்.

💷₹ பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவைகளுக்குப் பழைய ₹500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை ஏற்பார்கள். ₹1000 ரூபாய் தாள்களை எங்குமே செலுத்த முடியாது. வங்கிக் கணக்கில் மட்டுமே செழுத்த முடியும்.

💵₹ வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுப் பணத்தை வாரத்துக்கு ₹5,000 என்கிற நிலையில் மாற்றிக் கொள்ளலாம்.  வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் போது அவர்களது விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட் தகவலுடன் பதிவு செய்யப்படுகிறது.

💴₹ 2,000 ரூபாய் தாளில் வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டால் சொல்லாது என்ற தகவல் உண்மையல்ல.

💶₹ உங்கள் கணக்கில் இருந்து  ஒரு வாரத்துக்கு ₹24,000 ரூபாய் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்க மறுத்தால் அது குறித்து நீங்கள் ரிசர்வ் வங்கிக்குப் புகார் தெரிவிக்கலாம்.

💷₹ புதிதாக வந்துள்ள ₹500 ரூபாய் தாளில் சில தவறுகள் உள்ளது என்றும், எனினும் அது செல்லும் என்றும் வங்கிகள் தரப்பில் கூறுகின்றனர்.

💵₹ அதேபோன்று வாடிக்கையாளர்கள்  தங்களுக்குச் சொந்தமான பணத்தை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள் பணத்தை ஏற்க மாட்டார்கள். இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருமானவரித்துறை விசாரணை நடத்தும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்