November 26, 2016

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு


பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்