October 31, 2016

தொடங்கியது வட கிழக்கு பருவ மழை?... பொது மக்கள் மகிழ்ச்சி


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில்
வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவ சூழ்நிலை காரணங்களால் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கும் என கூறப்படுகிறது. காலம் காலமாக தீபாவளி பண்டிகையை மழையோடு கொண்டாடி நம்மக்கள் வர்ணபகவான் கருணையால் நேற்று மழையில் இருந்து தப்பினர். குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாலையில் கோயில், தியேட்டர், சுற்றுலா தளங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவழியாக பண்டிகை முடிந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்றிரவு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.

மழைக்காலம் தொடங்கவுள்ளதால், நகரில் நீர் தேங்குவதை தடுக்கவும், மழை நீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பால‌ன இடங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்