October 31, 2016

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை


மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் வளர்ச்சி துறை சார்பில்
ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு (2016-17) சென்னை மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 4ம் தேதி சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000ம், சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பெறும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று வரவேண்டும். போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்