October 06, 2016

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா??

9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா?

மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, மூன்று மாதமாக இருந்த, மகப்பேறு கால விடுப்பு, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், 'மகப்பேறு விடுப்பு காலம், ஒன்பது மாதங்களாக உயர்த்தப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு, இன்னும் அரசாணை வெளியிடாததால், இந்த நடைமுறை எப்போது, செயல்பாட்டுக்கு வரும் என, அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பி. பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''ஒன்பது மாத மகப்பேறு விடுப்பை, முதல்வர் அறிவித்து, ஒரு மாதம் ஆகிவிட்டது. அரசாணையை வெளியிட்டால், மகப்பேறு விடுப்பில் உள்ளோர், இன்னும் சில மாதங்கள் வீட்டில் இருந்து, தங்கள் குழந்தைகளை வளர்க்க, உதவியாக இருக்கும்,'' என்றார்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்