'அனைத்து பள்ளிகளிலும் இனி எட்டாம் வகுப்புக்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி' என்ற மனிதவள மேம்பாட்டுத்துறையின் பரிந்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டாயத் தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைவதாகவும். மாணவர்களுக்கு தோல்வி பயம் ஏற்படுவதில்லை என்பதால், அவர்களின் ஒழுக்கம் குறைகிறது என்கிறது மனிதவள மேம்பாட்டுத்துறை.
அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.