May 01, 2018

9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மே 4 ஆம் தேதி வெளியிடுவார் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்.


📔 தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

📘இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


📗இந்நிலையில் அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை நாளை (மே 2)  வெளியிடப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.

📒 இந்நிலையில், 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை தமிழக  முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி மே 4 ஆம் தேதி வெளியிடுவார் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்