January 25, 2018

IT 2018 - வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் உங்களின் ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement) மற்றும் மாத ஊதிய பட்டியல் (Pay Slip) பெற...


💶₹ மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

💷₹ ஊதியப்பட்டியல் (Pay Slip)

💴₹ ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைப்பில் (இணைய முகவரியில்) இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


👇

 Click here to Link  ➡  E Pay Slip

💵₹ இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் Tpf கணக்கு எண் & பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

💵₹ கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம்
Cps தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும்.

💶₹ மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும்.

💷₹ தொடக்க கல்வி துறை PTPF என இடவும்.

Pay Slip

💴₹ தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.

Annual income statement

💵₹ இதில், கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்க பிடித்தங்கள் & காப்பீட்டுப் பிடித்தங்கள் இடம் பெறாது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

💶₹ ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.

💷₹ எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகை விபரங்களை அறியலாம்.

                                         👇

Click here to Link  ➡  ECS Information

💴₹ ஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே  நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்