October 07, 2017

வாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO - உண்மைச் செய்தியா? வதந்தியா? தற்போது இந்த LOGO வை இந்தியாவில் பயன்படுத்தி வருபவர்களின் விபரங்களை ஆதாரங்களுடன் அறிய...




ஆசிரியர்  LOGO-விற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்ததா?

வலைத்தள வதந்தி

🌺தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களுக்கு என்று தனி LOGO-ஐ பயன்படுத்த உச்ச நீதிமன்றமே அனுமதி அளித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

🌺 இதன் உண்மைத் தன்மைக்கான எவ்வித சான்றும் அதில் இல்லை.

🌺 மேலும் அதில், "மருத்துவர் & வழக்கறிஞர்கள் பயன்படுத்த அனுமதித்தது போல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🌺 உண்மையில் இவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? அளிக்க முடியுமா? அளிக்க வேண்டிய அவசியமுண்டா? என பல கேள்விகள் எழுகிறது.

🌺 மருத்துவர் & அவசரச் சிகிச்சை வாகனங்களில் சிவப்பு நிற '+' குறி LOGO இடம்பெற்றிருக்கும். உண்மையில் இது இவர்களுக்கானதே அல்ல.

🌺 செஞ்சிலுவை இயக்கத்திற்காக, 1949-ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட LOGO அது.

🌺 இதை மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதை மருத்துவர் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

🌺 2007-ல் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) இந்திய மருத்துவக் குழுமத்திற்கு(IMC) இது குறித்து அறிவுறித்தி, தங்களின் LOGO-வை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.

🌺 அதன்பின்னரே, சிவப்பு நிற (90%) '+' குறியினுள் Dr அல்லது Rx என்று குறியிட்ட LOGO-ஐ பயன்படுத்த IMC முடிவெடுத்தது.

🌺இந்த LOGO-வையும் MBBS மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதியுண்டு என IMC கூறியுள்ளது.

🌺 இதனை சித்தா, ஆயுர்வேதா, கால்நடை மருத்துவர்களோ, மருந்தகங்களோ பயன்படுத்தக் கூடாது.

🌺 ஒரு LOGO- வைப் பயன்படுத்துவதில் இத்தனை வில்லங்கங்கள் உள்ள சூழலில்,

🌺 ஏதோ ஒரு LOGO-ஐ  அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது என்று அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களே பகிர்ந்து வருவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.

🌺 ஒரு திறமைமிக்க ஆசிரியர் எனில் இது போன்ற தகவலைப் பார்த்தவுடன் உங்களின் மனதில்,

🌺 உச்ச நீதிமன்றத்தில் இதுக்காக வழக்காடியது யார்?

🌺 இதை வடிவமைத்தது யார்?

🌺 தீர்ப்பளித்தது யார்?

🌺 தீர்ப்பின் விபரம் என்ன?

என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்க வேண்டும் அல்லவா!?

👉 உண்மையில் வாட்ஸ் ஆப்- ல் பரப்பப்படும் அந்த இலச்சினையின் உரிமையாளர்கள் யாரெனில், 

🔹 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இயங்கி வரும் Commerce Talent Search Examination Foundation என்ற அமைப்பாகும். 

🔸 இது வணிகவியல் தொடர்பான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பதிவு செய்யப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனம் ஆகும். 

🔹 பதிவு பெற்ற நிறுவன இலச்சினையை மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். 

🔸 எனவே, ஆசிரியர் இலச்சினை (LOGO)  என்று பகிரப்பட்டுவரும் செய்தியை இனி பகிர்வதை தவிர்ப்போம்.

உண்மையில் இந்த LOGO வை வடிவமைத்து பயன்படுத்தி வருபவர்கள் Commerce Talent Search Examination Foundation (CTSE), Ludhiana.

ஆதாரம்

👇






🌺 மற்ற குழுக்களுக்கு Forward செய்யும் முன் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது.
அன்புடன்
கல்விக் கதிர்..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்