October 09, 2017

மதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் நிறுத்தணும்

10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு
முறையை நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.


இது பற்றி பள்ளி கல்வித்துறை செயலர், அனில் ஸ்வரூப் கூறியதாவது:மாநில கல்வி வாரியங்களும், சி.பி.எஸ்.இ.,யும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை செயல்படுத்தி வருகின்றன.அடுத்த கல்வியாண்டு முதல், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் என, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 'கிரேடு' முறை தான் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, மதிப்பெண்களை கூடுதலாக வழங்கும் முறை, பல மாநிலங்களில் நீடிக்கிறது. இதில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன.நாடு முழுவதும், 2018 முதல், பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் வழங்குவதில், பொதுவான முறையை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்