September 19, 2017

PGTRB முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்..

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.


இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அசல் கல்விச் சான்றுகளுடன் செல்ல வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு  அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களுக்கான கவுன்சலிங்கும் நடத்தப்படும். பணி நியமன உத்தரவுகள், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் 21ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்