September 26, 2017

BREAKING NEWS :தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.



தமிழக அரசியல் நிலவரம் தொடர்ச்சியாக பரபரப்பாக காணப்படும் நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் சென்னை வந்துள்ளார். இந்நிலையில் எந்தவித அசாதாராண சூழலையும் சந்திக்க, சிறப்பு காவல் படை ஆயத்தமாக இருக்குமாறு மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.


குறிப்பாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர்,  நாகப்பட்டினம், மதுரை மாவட்ட சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதே போல் நாளை திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்