September 18, 2017

ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை - தனிநபர் மசோதா மீது விரைவில் விவாதம்..

பெண்களுக்கு வழங்கப்படுவது போல், ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்கும் தனிநபர் மசோதா, நாடாளுமன்ற
அடுத்தக் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வர உள்ளது.

பெண்களுக்கான பேறுகால விடுமுறையை, 12 வாரத்தில் இருந்து, 26 வாரமாக உயர்த்தும் மசோதா, நாடாளுமன்றத்தில் இந்த
ஆண்டு நிறைவேறியது. அதுபோல ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிக்கும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின், ராஜிவ் சதவ், இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவுடன் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், குழந்தை பராமரிப்பு என்பது, தாய் மற்றும் தந்தை இருவருக்குமே உள்ள கூட்டு பொறுப்பு. குழந்தை பிறப்பின்போது, ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை அளிப்பதன் மூலம், அவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்படும். இது குழந்தையின் எதிர்காலத்துக்கு சிறப்பானதாக இருக்கும்.

அதனால், ஆண்களுக்கும் மூன்று மாதங்கள் வரை, சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், தத்தெடுப்போர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்போருக்கும் இந்த சலுகை அளிக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும், 32 கோடி ஆண்கள் பலன் அடைவர்
என்றும் மசோதா குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அடுத்தக் கூட்டத் தொடரில், இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்
கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்