September 21, 2017

சொந்த நாட்டில் அகதிகளாகப் பட்ட ஆசிரியர்கள் வெளி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி..

2012, 2013, 2015 TRB ல் தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காமல் வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து இரண்டரை வருடத்தில் இருந்து 5 வருடம் வரை காத்திருந்து இந்த இந்த கலந்தாய்வில் நமக்கு சொந்த
மாவட்டத்தில் இடம் கிடைத்து விடும் அல்லது அடுத்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் இடம் கிடைத்துவிடும் என்று 5 வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் தகவல் என்னவென்றால் upgrade schools and new creation post வந்தவுடன் நமது மாவட்டத்தில் அதிக காலி பணியிடங்கள் உருவாகும் பிறகு நாம் கலந்தாய்வின் முலம் நமது  சொந்த  மாவட்டத்திற்கு வந்துவிடலாம் என்று 5வருடமாக சொந்த நாட்டில் அகதிகளாய் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு???(அகதிகளுக்கு)

நேற்றைய 19.09.2017புதிய பணிநியமன கலந்தாய்வில் காட்டப்பட்ட upgrade and new creation vacancies  பேரதிர்ச்சியாக இருந்தது.

ஏற்கெனவே வெளிமாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு???? (அகதிகளுக்கு)பொது கலந்தாய்வு நடத்தியிருக்கலாம். அல்லது கடந்த மே மாதத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் new creation post காட்டியிருக்கலாம்.

இதுஎதுவும் செய்யாமல்

தங்கள் குடும்பங்களை இழந்து ஞாயிறு மற்றும் வெள்ளி இரவு பயணம்
காரணமாக தூக்கமின்மை,திங்கள் முழுவதும் தலைவலியுடன், இரவு பயணத்தால் சரியாக இயற்கை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல், குடும்ப உறவுகளை மறந்து,வயதான பெற்றவர்களை கவனிக்க முடியாமல்,பெற்ற குழந்தைகளை பார்க்காமல்,கணவனை பிரிந்து,இரவு பஸ்சில் தனிப் பெண்ணாக சாகச பயணம் செய்து,வாரவாரம் ஏதோ ஒரு காரணங்களுக்காக சொந்த ஊர் போய்வந்து,வாங்கும் சம்பளத்தில் 50%பயணத்திற்காக செலவு செய்து,கடைசி வரைசொந்த மாவட்டத்தில் பணிபுரியாமல் சாகுங்கள் என்று

சொல்லாமல் சொன்ன பள்ளி கல்வித்துறை உயர்????அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!!!!!!

இதை அனைத்தையும் கண்டும் காணாத, கேஸ் போட்டுள்ளோம் எ‌ன்று கூறி மௌன பேராட்டம் நடத்தும் அனைத்து வகையான மேல்நிலை,முதுகலை  சங்கங்களுக்கு பாராட்டுக்கள்....

மேலும் புதிய நியமன ஆணை பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.......

                              இவண்
சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கும்,ஆசிரியர்களில்(அகதிகளில்)இருந்து ஒரு கிணற்றுத் தவளை.....🐸🐸

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்