September 15, 2017

அங்கீகாரம் ரத்து': பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. வழிகாட்டி நெறிமுறைகள்: ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு பள்ளியில், 7 வயது மாணவர் படுகொலை
செய்யப்பட்டார். டில்லியில், 5 வயது மாணவி, பள்ளி ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை: அதில், கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களின் பாதுகாப்புக்கு, பள்ளி நிர்வாகம் மட்டுமே முழு பொறுப்பு. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களை பாதுகாப்பதில் உள்ள பொறுப்பு குறித்து, பள்ளி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில், கண்டிப்பாக, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்