July 05, 2017

TRB - தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பானையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - புதிய தலைமுறை TV Video இணைக்கப்பட்டு உள்ளது.


Click here to Video (புதிய தலைமுறை TV)👇



🔹 தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டது.

🔸 இந்த அறிவிப்பானையில் B.E படிப்பில் 1st class'ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், எம்.இ படித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொறியியல் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களின்  விண்ணப்பங்கள் ஏற்க மறுக்கப்படுவதை எதிர்த்து எம்.இ.
பட்டதாரி திலகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

🔹 இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (05.07.2017)  விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.இ படித்தவர்களின்விண்ணப்பங்கள் ஏற்க மறுப்பது முற்றிலும் தவறானது எனவும்,  இது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிரானது எனவும், வழக்கறிஞர் சங்கரன் வாதிட்டார்.

🔸 இதையடுத்து காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக  பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பானை ரத்து செய்தும் ஏஐசிடிஇ விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பானை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்