July 17, 2017

அண்ணாமலை பல்கலையில் 'ரேண்டம்' எண் வெளியீடு.

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், வேளாண் அறிவியல், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, தரவரிசை பட்டியலை, துணைவேந்தர் மணியன் வெளி
இட்டார்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், பொறியியல், வேளாண் அறிவியல், மீன் வளம், தொழில்முறை சிகிச்சை - பி.ஓ.டி., மற்றும் இயற்பியல் சிகிச்சை - பி.பி.டி., ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளில், மாணவர் சேர்க்கைக்கு, நேற்று, 'ரேண்டம் எண்' வெளியிடப்பட்டது.
பின், துணைவேந்தர் மணியன் கூறியதாவது:

இந்த ஆண்டு, வேளாண் அறிவியல் அரசு ஒதுக்கீடு பொதுப் பிரிவுக்கு, 37 ஆயிரத்து, 430 ரூபாய், சுயநிதி பிரிவுக்கு, 1 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய், தோட்டக்கலைப் பிரிவுக்கு, 37 ஆயிரத்து, 430 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.பொறியியல் பாடப்பிரிவில், கடந்தாண்டு, ஏ.ஐ.சி.டி.இ., 800 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு, கூடுதலாக, 220 இடங்களுக்கு, அனுமதி வழங்கி உள்ளது. பிளஸ் 2 அல்லது இதற்கு இணையான கல்வியின் மதிப்பெண் அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு விதிப்படியும், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

கலந்தாய்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும். தகுதி உள்ள மாணவர்கள் கலந்தாய்வு அட்டவணை, கலந்தாய்வு அனுமதி கடிதத்தை பல்கலைக் கழக இணைய தளத்தில் www.annamalaiuniversity.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்