July 19, 2017

லட்சத்தைத் தாண்டியது சம்பளம்... குஷியில் தமிழக எம்எல்ஏ-க்கள்!

தமிழக எம்எல்ஏ-க்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தற்போது எம்எல்ஏ-க்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்தச் சம்பளம், 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில், தமிழக எம்எல்ஏ-க்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார், எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு... ’தற்போது எம்எல்ஏ-க்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்தச் சம்பளம், 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடியில் இருந்து 2.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்எல்ஏ-க்களின் சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஓய்வுபெற்ற எம்எல்ஏ-க்களின் ஓய்வூதியம், 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது’ என முதல்வர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்