July 07, 2017

நீதிமன்றத்தை எதிர்த்துப் போராட ஆசிரியர் சங்கங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.




🔹 சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்தது தொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்துக் கூறியிருந்தார்.

🔸 இந்த கருத்துகளை எதிர்த்து, நீதிபதி கிருபாகரனுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

🔹 இந்த நிலையில், ஐஐடி மாணவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

🔸 உயர் நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? ஆண்டின் பாதி நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்குச் செல்வதில்லை. முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

🔹 ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் நிர்வாகிகள், பணிக்கு சரியாக வருவதில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பிற ஆசிரியர்கள் முன் வைக்கின்றனர்.

🔸 இதற்கு ஆதாரம் இருக்கிறது. பலரும் இது தொடர்பாக கடிதம் எழுதி வருகின்றனர் என்று கூறினார்.

🔹 மேலும், குழந்தைகள் தோல்வி அடைவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் பெற்றோர், குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்