July 02, 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு மாற்றம் ஏற்படும் வரை தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


'ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு சங்க பொதுச் செயலர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:

அரசு ஊழியர்களின், ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட, அலுவலர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான, அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்.

ஊதிய மாற்றம் ஏற்படும் வரை, தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை, இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தோம்.

போராட்டம் துவங்கிய இரண்டாம் நாள், அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, ஜூலைக்குள், ஊதிய மாற்றம் செய்யப்பட்டு விடும் என, உறுதி அளித்தனர்.

ஜூன், 30க்குள்,அலுவலர் குழு பரிந்துரைகளை அளிக்காவிட்டால், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
அதை ஏற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை, தற்காலிக மாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஜூன், 30க்குள், அலுவலர் குழு, பரிந்துரை களை வழங்கவில்லை. எனவே, அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீத ஊதியத்தை, ஜூலை, 17க்குள் வழங்க வேண்டும்.

இல்லையெனில்,தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலை நிறுத்தப் போராட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடர வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்