July 27, 2017

மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் 2,200 ஆண்டுகள் பழமையானவை மாநிலங்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தகவல்.


🔸 மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட‌ கார்பன் மாதிரிகளின் மீது அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனையில் அவை சுமார் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🔹 கீழடியில் எடுக்கப்பட்ட பழம் பொருட்களின் காலகட்டத்தை நிர்ணயம் செய்ய அவை கார்பன் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? என மாநிலங்க‌ளவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.

🔸 இதற்கு பதிலளித்த மத்திய கலாசார மற்றும் சுற்ற‌லாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இ‌ண்டு கார்பன்‌ மாதிரிகளை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ளா பீட்டா அனலெடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தோம்.

🔹 அந்த நிறுவனம் ஆய்வு நடத்தி அனுப்பிய அறிக்கையின்படி ஒரு மாதிரி 2,160 ஆண்டுகள் பழமைவாய்ந்தது எனவும், மற்றொரு மாதிரி 2,200 ஆண்டுகள் பழமை வ‌ய்ந்தது எனவும் தெரியவந்திருக்கிறது. ஆனால், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கார்பன் மாதிரிகள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டது.

🔸 பழங்கால பொருட்கள் எதுவும் கார்பன் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்