July 07, 2017

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை அடுத்த கல்வியாண்டு முதல் ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தகவல்.


🔹 ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

🔸 கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது.

🔹 இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.

🔸 இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

📋 திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார்.

🔹 அப்போது மத்திய அரசின் கட்டாய தேர்ச்சி திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறினார்.

🔸 இதனை முன்னிட்ட கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆல் பாஸ் திட்டத்தை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

🔹 மத்திய அரசின் இந்த முடிவால் அடுத்த ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்