July 06, 2017

ஜூலை 10 ஆம் தேதி முதல் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு.




🔹 பிளஸ் 2 ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது.


🔸 பிளஸ்2 ரிசல்ட் கடந்த மே மாதம் 12ந்தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

🔹 அதன்மூலம் தங்களது மேற்படிப்புக்கான தேவைகளை நிறைவேற்றி வந்தனர்.

🔸 இந்நிலையில், தற்போது பிளஸ்2 முடித்தவர்களுக்கு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழை வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

🔹 ஜூலை 10-ம் தேதி திங்கட்கிழமை முதல் ஒரிஜினில் மார்க் சர்டிபிகேட் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

🔸 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியில் ஜூலை 10 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்