July 09, 2017

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் வரும் ஜூலை 15 ல் கொண்டாடப்பட உள்ளதால் அன்றைய தினம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.



கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு, சனிக்கிழமையன்று வந்தாலும், அனைத்து பள்ளிகளிலும், சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியிருப்பதாவது:

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காமராஜர் வாழ்க்கை வரலாறு, அவரது எளிய வாழ்க்கை, ஆட்சியில் புரிந்த சாதனை, கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.இது குறித்த கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தியும் பரிசு வழங்கப்பட வேண்டும். அன்றைய தினம் ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்