June 21, 2017

ஜி.எஸ்.டி (GST) கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் புதிய வரி குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்




🔹 ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

🔸 இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.

🔹 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலாகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.

🔸 பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக சட்டசபையிலும் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது.

🔹 முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கு கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது.

🔸 இதில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என, நான்கு வித வரிகள் உள்ளன.

🔹 இந்த குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஜி.எஸ்.டியில் பொருட்களுக்கான வரி விதிப்பை இறுதி செய்து வருகிறது. முன்னதாக ஜி.எஸ்.டி கவுன்சிலின் 17-வது கூட்டம் புதுடெல்லியில்  நடைபெற்றது.

🔸 கிட்டத்தட்ட பெரும்பாலான பொருட்களுக்கான வரி இறுதி செய்யப்பட்டுள்ளது.

🔹 இந்நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளம்

http://www.gstcouncil.gov.in

  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🔸 இணையதளத்தில் புதிய வரி குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்