June 06, 2017

பள்ளிகளில் தினமும் இறை வணக்க கூட்டம்..

பள்ளிகளில், வார வேலை நாட்களான, ஐந்து நாட்களிலும், இனி இறை வணக்க கூட்டம் நடத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி நாட்களில், தினமும் இறை
வணக்க கூட்டம், பள்ளி மைதானத்தில் நடந்து வந்தது. 2011ல், இந்த முறை ரத்து செய்யப்பட்டு, திங்கட்கிழமை மட்டும், கூட்டு பிரார்த்தனை நடத்தப்படும்; மற்ற நாட்களில், வகுப்பறைகளில், பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களிடம் தேசப்பற்று, தேசியக் கொடி மீதான மரியாதை, பொது அறிவு வளர்த்தல் போன்றவற்றை ஏற்படுத்த, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்பட்டதும், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்