June 23, 2017

பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரித்து  வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணியை அனுபவம் மிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இணைய தளம் மூலம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கால அவகாசம் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்