June 18, 2017

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரித்திகா.




👍 அரசு பள்ளி மாணவி பிரத்திகா விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கரில் 6,00,000 ஓட்டுகள் பெற்று பட்டம் வென்றார்.

🏠 ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார்.


🏆 குவிந்தது மலைப்போல மக்கள்  வாக்குகள்.

🔸 விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் சீனியர் 5 இறுதி போட்டில் திருவாரூர் தியானபுரம் அரசுப் நடுநிலைப் பள்ளி மாணவி 6 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.... ரூ 40 லட்சம் பரிசை தட்டிக் சென்றார்.

🔹 மாணவியின் இத்தகைய சாதனைக்கு உழைத்த / உறுதுணையாக இருந்த அனைவரையும் கல்விக்கதிர் மனதார பாராட்டுகிறது.


திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரித்திகா.

இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் இவரின் தந்தை ரமேஷ் டிங்கரிங் வேலை செய்து வருகிறார். தாய் விவசாய வேலை செய்து வருகிறார்.

அபாரக் குரல் :

திருவாரூர் மண்ணுக்கு புகழ் சேர்த்த சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பாகவதர், அரசியல் சாணக்கியன் கலைஞர் அவர்களுக்கு அடுத்து தற்போது திருவாரூர் மண்ணிலிருந்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் பிரித்திகா என்ற பதின்மூன்று வயது  மாணவி .

தான் படிக்கும் பள்ளியில் நடந்த  காலை வழிப் பாட்டு கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது இவரின் அபார குரலினை பள்ளி ஆசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

தொடர்ந்து ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் பிரபல தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் பாடல் குரல் தேர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவியின் பிரிந்திக்கா முதல் சுற்றில் தேர்வானார்.

ஆசிரியர்கள் ஊக்குவிப்பு :

தொடர்ந்து தியானபுரம் அரசு பள்ளி  ஆசிரியர்கள் ஊக்குவிப்போடு பொருளாதார உதவியும் செய்ய அடுத்தடுத்த சுற்றுக்களில் அதிரடியாக பாடி கலக்கியதால் அரை இறுதிக்கு முன்னேறினார்.

அதிரடி பாடல்கள்:

 கால் இறுதி மற்றும்  அரையிறுதி போட்டியில்  சொக்க வைக்கும் குரலாலும், மண்வாசனை கலந்த பாடங்களிலும் சின்னக்குயில் சித்ரா, எஸ்.பி பாலசுப்ரமணியன், மாங்குடி உஷா போன்ற ஜாம்பவான்களின் மனதை கவர்ந்து அதிரடியாய் இறுதி சுற்றில் ஐந்து போட்டியாளர்களின் ஒருவராய் நுழைந்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு :

மாணவி பிரித்திகா அரசுப் பள்ளி மாணவி என்பதால் இறுதி சுற்றில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நெட்டிசன்கள் அனைவரும் அதிரடியாய் வாக்குகளை இணையதளத்தில் பதிவு செய்தனர். இறுதி சுற்றின் வெற்றி என்பது மக்களின் வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்பட்டதால்  இவருக்கு மலைப்போல் மக்கள் வாக்குகள் குவிந்தன. இறுதி போட்டியின் மற்ற போட்டியாளர்களை விட ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் நேற்று இரவு நடந்த போட்டில் வெற்றுப் பெற்று பட்டம் வென்றார்.

நாற்பது லட்சம் பரிசு:

இவர் பாடிய பாடல்களை ரசிக்காத மனங்களே கிடையாது போல இவர் பாடிய பாடலான " தென்றல்  வந்து தீண்டும் போது " என்ற பாடலை யூ டியூப் தளத்தில் முப்பத்து ஆறு லட்சத்து அறுபத்து ஏழாயிரம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெற்றிப் பெற்ற மாணவிக்கு நாற்பது லட்சம் மதிப்புள்ள புதிய  வீடு பரிசாக வழங்கப்பட்டது.. தற்போது இந்த கிராமத்து இசைபுயலின் வெற்றியினை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்