7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து 50 லட்சம் மத்திய அரசு
ஊழியர்கள்,மாற்றிஅமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தநிலையில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்தவாரம் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில்24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம்என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது25 சதவீதம் முதல் 27சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள், அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம்,10 சதவீதம் என இருக்க வேண்டும், இதை அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வே உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுஇருந்தனர்.
இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.அதில் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அகவிலைப்படி உயர்வு, சலுகைகள் அதிகரிப்பு ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது, 27 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது, இதர நகரங்களுக்கு24 சதவீதம்வரை இருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றி அமைக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளுக்கான தொகை ஜூலை மாதம் 18 தேதிக்குபின் மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு முன்தேதியிட்டு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாகரூ.29 ஆயிரத்து 300 கோடிசெலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்