தமிழகம் முழுவதும், 23 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்ட படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், வரும், 21ல், துவங்குகிறது.
தமிழகத்தில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில், பி.எட்., முதலாம் ஆண்டு சேர்க்கை, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் நடத்தப்படுகிறது. சென்னை, லேடி வெலிங்டன் அரசு கல்வியியல் கல்லுாரி, கவுன்சிலிங்கை நடத்துகிறது.
இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், வரும், 21ல், துவங்கி ஜூன், 30 வரை நடக்கிறது. விண்ணப்பங்களை, 13 கல்லுாரிகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை, www.tndce.in,www.ladywillingdoniase.com என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 7க்குள், லேடி வெலிங்டன் கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனாலும்,
நேற்று மாலை வரை, இரண்டு இணையதளங்களிலும், பி.எட்., மாணவர் சேர்க்கை விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்