June 04, 2017

17 ஆயிரம் பள்ளிகளில் துப்புரவு பணியாளர் வேலை கேள்விக்குறி.

தமிழகத்தில் 17 ஆயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ௬ மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது.

2016ம் ஆண்டு இந்த பள்ளிகளில் தலா ஒரு தற்காலிக துப்புரவு பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டனர். தொடக்கப் பள்ளி துப்புரவு பணியாளருக்கு சம்பளம் 750 ரூபாயும், துப்புரவு பணிக்கான பொருள்கள் வாங்க 300 ரூபாயும் சேர்த்து 1050 ரூபாய் மாதம் வழங்கப்பட்டது. நடுநிலைப் பள்ளிகளில் 1100+ 300 சேர்த்து 1,400 ரூபாய் வழங்கப்பட்டது.
அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் 2016 ஜூன் முதல் நவ., வரை ஆறு மாதங்கள் முறையாக சம்பளம் வழங்கப்பட்டது. டிச., முதல் மே, 2017, வரை ௬ மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

ஆனாலும், இவர்கள் தொடர்ந்து பள்ளிகளில் துப்புரவு பணி செய்கின்றனர். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே சம்பளம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி நிதி நெருக்கடியை காரணம் காட்டி, துப்புரவு பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் முயற்சி நடப்பதாக, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி
முத்துமுருகன் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்