தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான TET தேர்வு தாள் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30 ம் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்வுகளில் ஒருசில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்ன எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்திலேயே TET தேர்வில் கலந்து கொண்டார். தாலிகட்டிய அடுத்த சில நிமிடங்களில் அவர் தேர்வறையில் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்ததை அடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜின் மனைவி நோயம் ரோஸ்மேரி என்ற நிறைமாத கர்ப்பிணி தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரசவம் நல்லபடியாக முடிந்ததால் அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்