May 02, 2017

PG TRB தேர்வுக்கு தயார் ஆவது எப்படி.. ?



📝 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வர இருக்கிறது. தேர்வுக்கு எப்படி தயார் ஆவது என்பதை பற்றி  பார்ப்போம்.

📚 மதிப்பெண்கள்

🔸 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வானது 150 மதிப்பெண்களை கொண்டது.

🔹 150 மதிப்பெண்களில் 110 மதிப்பெண்கள் உங்கள் பாட சம்பந்தமான கேள்விகளை கொண்டு இருக்கும்.

🔸 மீதம் உள்ள 40 மதிப்பெண்களில் 30 கேள்விகள் கல்வியியல் / உளவியல் (B.Ed.) சம்பந்தப்பட்டவை.

🔹 10 மதிப்பெண்கள் பொது அறிவு சம்பந்தமானவை.

🔸 பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் பாடத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பள்ளி புத்தகம் முதல் இளநிலை மற்றும் முதுகலை புத்தகங்கள் அனைத்தும் (உங்கள் முக்கிய பாட சம்பந்தமானவை) தேவை.

📚 பாடத்திட்டம்

🔹 தற்போதய தேர்வின் (ஜூலை 2, 2017) பாடத்திட்டம்

👉 Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015-2016 and 2016-17

👉 Click here to Download  Syllabus

🔸 பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்தாகிவிட்டது.

🔹 புத்தகங்கள் எடுத்து வைத்தாகிவிட்டது.

📚 அடுத்து செய்ய வேண்டியது....

🔸 பாடதிட்டத்தில் உங்கள் முக்கிய பாடமானது பத்து Unit ஆக இருந்தால் அதற்கு ஏற்ப பத்து நோட்களை வாங்குங்கள்.

🔹 பாடத்திட்டத்தில் முதல் யூனிட்டில் முதல் தலைப்பை பாருங்கள்.

🔸 அந்த தலைப்பு ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இருப்பின் அந்த தலைப்பில் புத்தகங்களின் அடிப்படையில் குறிப்புகளை எடுத்து உங்கள் நோட்களில் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

🔹 இப்படி எடுக்கப்படும் குறிப்புகள் தேர்வு நெருங்கும் நேரத்தில் மீண்டும் திருப்புதல் செய்யவும் மற்றும் எளிதாக நினைவில் நிறுத்தவும் உதவும்.

🔸 மேலும் குறிப்பட்ட தலைப்பை இணையத்தில் தேடி அதில் இருந்தும் குறிப்புகளை எடுத்து கொள்ளுங்கள்.

🔹 உங்களிடம் போதுமான புத்தகங்கள் இல்லையா..

🔸 கவலையே வேண்டாம். உங்கள் மாவட்ட பொது நூலகங்களை நாடுங்கள். அங்கு அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும். அவற்றில் இருந்து முக்கிய பகுதிகளை நகல் எடுத்து கொள்ளலாம். நண்பர்களிடம் இருந்தும் தரமான புத்தகங்களை கேட்டுப் பெறுங்கள்.

🔸 இப்படி தரமான பாட குறிப்புகளை நீங்களே தயார் செய்து படிப்பது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதுடன், அதிக மதிப்பெண்களை பெறவும் உதவும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்