May 29, 2017

RTE - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பித்திருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


🔹 பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


🔸 இச்சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க 20.04.2017 முதல் 26.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது.

🔹 சேர்க்கைக்கு மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணைய வழியாகப் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிக்கும் விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் 30.05.2017அன்று பதிவிறக்கம் செய்யப்படும்.

🔸 நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாகவோ, அதைவிடக்குறைவாகவோ விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின், விண்ணப்பித்துள்ள தகுதியான அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர்க்கை வழங்கும் பொருட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால், 31.05.2017 அன்று சார்ந்த பள்ளிகளுக்கு குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் வழங்கப்படும்.

🔹 நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில், 31.05.2017 அன்று குலுக்கல் முறையில் சேர்க்கைகான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். குலுக்கல் நடத்தும் பொருட்டு கல்வித்துறை சார்ந்த பிரதிநிதி ஒருவரும், மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமனம் செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்படுவர்.

🔸 சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடைபெறும்போது, மாவட்டக் கல்வித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் சென்று பார்வையிடுவர்.

🔹 முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான, ஆதரவற்றவர்கள் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.

🔸 அதன்பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும்.

🔹 அவ்வாறு குலுக்கல் நடத்தப்பட்டபின்னரும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காலியிருப்பின், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமாக இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக்கொண்டு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும்.

🔸 குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பள்ளியில சேரவில்லையெனில் காத்திருப்புப் பட்டியலிலிருந்து சேர்க்கை வழங்கப்படும்.

🔹 சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பட்டியல், காத்திருப்புப் பட்டியலில் கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி/ வருவாய்த்துறை சார்ந்த பிரிதிநிதி, பள்ளியின் முதல்வர் மற்றும் குலுக்கலில் கலந்துகொண்ட பெற்றோர்கள் கையொப்பமிட்டு 31.05.2017 அன்றே பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும். சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு 05.06.2017க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்