May 30, 2017

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்..



உள்ளங்கையில் சான்றிதழ்அரசு இ–சேவை மையங்களின் சேவைகளை இன்னும் எளிமையான முறையில் பெறுவதற்கு, அனைத்து இ–சேவை மையங்களிலும் 2.5.2017 முதல் அரசு சேவை பெற விரும்பும் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் விண்ணப்பதாரர் அவர்கள் கேட்கும் சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக டைனி யூ.ஆர்.எல். அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் ஸ்மார்ட் செல்போன் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ என்ற திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இணைய வழியாக தொடங்கி வைத்தார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்