May 29, 2017

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🔵 திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது,

🔸 “வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது.


🔹 பள்ளி மாணவர்களுக்கு அவர்களது விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது.

🔸 போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ரூ.2.13 கோடியில் மாவட்டந்தோறும் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது” என்றார்.

🔵 நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: 

🔸10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

🔹 நிதிநிலைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும்.

🔸 வரும் கல்வி மானியக் கோரிக்கையின்போது நாடே வியக்கும் அளவுக்கு கல்வித் துறையில் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்