May 30, 2017

சட்டப் படிப்புகளில் 2017 - 2018 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (மே 31) தொடங்கும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


🔸 சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான (பிளஸ் 2 முடித்தவர்களுக்கான) விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை (மே 31) தொடங்கப்பட உள்ளது.

🔹 பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புப் பெற்றுள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

🔸 சட்டப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள், மூன்று ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய 10 அரசுக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த மற்றும் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

கல்வித் தகுதி என்ன?

🔹 பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.சி.ஏ.-எல்.எல்.பி. ஆகிய இளநிலை ஹானர்ஸ் படிப்புகளில் சேர பிளஸ் 2 தேர்வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

🔸 ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்று ஆண்டுகள் எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🔹 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🔸 பல்கலைக்கழகத்துடன் இணைப்புப் பெற்றிருக்கும் 10 அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ.-எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🔹 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🔸 இந்தக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர, ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🔹 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கலந்தாய்வு எங்கு நடைபெறும்?

 இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னை அடையாறில் எண்.5 டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள சட்டப் பல்கலைக்கழக (நிர்வாக வளாகம்) வளாகத்தில் நடைபெறும் என பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பாலாஜி கூறினார்.

 கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் எங்கு எப்போது கிடைக்கும்?

🔹 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பொருத்தவரை சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக நிர்வாக வளாகத்தில் மட்டுமல்லாமல், தரமணியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்திலும் வழங்கப்படும்.

🔸 அரசு சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் அந்தந்த சட்டக் கல்லூரிகளிலும் தபால் மூலமும் விண்ணப்பங்களைப் பெறலாம்.

🔹 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு...பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 31-ஆம் தேதி தொடங்கி ஜூன் 19-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

🔸 பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 19 கடைசி நாளாகும்.

3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு...

🔹 இந்தப் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 31-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

🔸 பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாகும்.

முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு...

🔹 முதுநிலை சட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

அரசுக் கல்லூரிகளில்...

🔸 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும்.

🔹 ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி ஜூன் 23-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

🔸 பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 23 கடைசி நாளாகும்.

🔹 மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி ஜூலை 17 ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

🔸 பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 17 கடைசி நாளாகும்.

வயது உச்ச வரம்பு கிடையாது: 

🔹 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக 5 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர வயது உச்ச வரம்பு இந்த ஆண்டுக்கு நீக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த வயதினரும் இந்தப் படிப்புகளில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்