May 31, 2017

அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக உயர்த்தி வழங்க, தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.




அவரது அறிக்கை:

தமிழகத்தில், 1981ல் இருந்தே, மாற்று திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


அவற்றில், பார்வை குறைபாடு உடையவர், செவித்திறன் குறைபாடு உள்ளவர், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 1 சதவீதம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016ன் படி, அரசு பணியிடங்களில், 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், 3 சதவீத ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக, தமிழக அரசு பணிகளில் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த ஒதுக்கீட்டில், பார்வை குறைவுடையோருக்கு, 1 சதவீதம்;

செவித்திறன் குறைபாடு உள்ளவர், 1 சதவீதம் வழங்கப்படும்.

கை, கால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு, 1 சதவீதம் வழங்கப்படும்.

புற உலகு சிந்தனையற்றவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்டோருக்கு, 1 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.

 இந்த 4 சதவீதம் இட ஒதுக்கீடானது, அனைத்து அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனம், வாரியம், உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனம், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு பொருந்தும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்